Popular Posts

Wednesday, January 5, 2011

நான் படித்தவை - 05/01/2011

வீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்?
தாவர இனங்களில் துளசி மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது. பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்-டை -ஆக்சைடு டை எடுத்து கொண்டு ஆச்சிஜநை வெளியிடும் என்பது நமக்கு தெரியும் . அனால் துளசி செடி மற்ற தாவரங்களை விட மிக அதிகமான ஆச்சிஜநை வெளியிடும் தன்மை கொண்டது. சுற்று சூழலில் உள்ள காற்று மண்டலத்தையே சுத்தபடுத்தும் தன்மை கொண்டது. இதனாலேயே ஒவோர் வீடுகளிலும் ஆச்சிஜநை அதிகம் வெளியிடும் துளசியை நட்டு வளர்த்து அதிகாலை வேலையில் அதை சுற்றி வந்து வழிபடும் முறையை வைத்துள்ளனர்.

அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை பிரம்ம முஹூர்த்தம் என்று சொல்வார்கள். அதாவது இந்த வேலையில் தான் இயைகையின் அத்தனை அம்சங்களும் மிகவும் புதிதாக சுத்திகரிக்கபட்டதைபோல இருக்கும். இந்த நேரத்தை தான் அறிவியலர்கள் ஓசோன் அதிகமிருக்கும் நேரம் என்கிறார்கள். இந்த நேரத்தில் துளசியை சுற்றி வந்தால் தூய்மையான ஆச்சிஜநை சுவாசிக்கலாம் என்பதே உண்மை.

No comments: