Popular Posts

Sunday, May 1, 2011

தெரிந்துகொள்ள

Longest English Word:
Praetertranssubstantiationalistically has 37 letters.

2) Book Without Letter "e":
GADFY, written by Earnest Wright in 1939 is a 50,000+ word book, which doesn't contain a single word with 'e' in it

3) Word without Vowel:
Rhythm
Sky
Fry
Cry

4) Human Brain:
Organ of body which has no sensation when cut.

5) Crocodile:
Only animal & reptile which sheds tear while eating.

6) No of Alphabets, which SOUND AS WORDS:They are
** **B* Bee *
** **C* Sea*
** **G** * Zee*
** ** I* Eye *
** ** Q* Queue*
** ** R* Are *
** ** S* Yes *
** **T* Tea* **
** ** U* You *
** ** Y* Why


ஊருக்குச் சிறப்பு சேர்க்கும் சில விஷயங்கள்
  • திருப்பதி-லட்டு.
  • திருநெல்வேலி-அல்வா.
  • பழனி-பஞ்சாமிர்தம்.
  • தூத்துக்குடி-முத்து, உப்பு
  • கன்னியாகுமரி - சூரிய உதயம் & மறைவு, முக்கடல் சங்கமம்.
  • பண்ருட்டி-பலாப்பழம்.
  • மணப்பாறை-முறுக்கு.
  • சேலம்-மாம்பழம்.
  • திண்டுக்கல்-பூட்டு.
  • திருப்பூர்-பனியன்.
  • தேனி-கரும்பு.
  • மதுரை-மல்லி.
  • சிவகாசி-பட்டாசு.
  • நாமக்கல்-முட்டை.
  • தஞ்சாவூர்-தட்டு.
  • பிள்ளையார்பட்டி-அப்பம், மோதகம்.
  • மன்னார்குடி - மதில்.
  • திருவாரூர் - தேர்.
  • கும்பகோணம்- கோவில், வெற்றிலை.
  • திருச்சி- மலைக்கோட்டை.
  • மேட்டூர்- அணைக்கட்டு.
  • கோயம்புத்தூர்-பஞ்சு.
  • திருவிடைமருதூர்-தெரு.
  • காஞ்சிபுரம்- பட்டு.
  • குற்றாலம்-அருவி.
  • கொல்லிமலை-தேன்.
  • கோட்டக்கல்-ஆயுர்வேதம்.
  • சிதம்பரம்-ரகசியம்.
  • நீலகிரி- தேயிலை.
  • ராஜபாளையம்-நாய்.
  • முதுமலை-யானை.
  • பத்தமடை-பாய்.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா.
  • அலங்காநல்லூர் - ஜல்லிக்கட்டு.
  • திருவண்ணாமலை - தீபம்.
  • திருச்செந்தூர் - பனை வெல்லம்(சில்லுக் கருப்பட்டி)
  • ஒக்கேனக்கல் -நீர்வீழ்ச்சி.
  • இராமேஸ்வரம் - பாம்பன் பாலம்.
  • கரூர்-கோரைப்பாய்.
  • ஊத்துக்குளி-வெண்ணெய்.
  • சென்னிமலை-பெட்சீட்.
  • குமாரபாளையம்-லுங்கி.
  • ஈரோடு - மஞ்சள்.
  • கோவில்பட்டி-கடலை மிட்டாய்.
  • சாத்தூர்-காரச்சேவு.
  • சின்னாளபட்டி- சுங்குடி சேலை
  • விருதுநகர்-புரோட்டா
  • ஆம்பூர்-பிரியாணி
  • உறையூர்-சுருட்டு


    • மனிதன் உயிரிழந்த பின்பும் அவனது உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்:
      கண் - 31 நிமிடம்
      மூளை - 10 நிமிடம்
      கால் - 4 மணித்தியாலம்
      தசை - 5 நாட்கள்
      இதயம் - சில விநாடிகள்
    • உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"
    • Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"
    • 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால் 12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.
    • சராசரி மனிதனின் குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
    • சராசரி மனிதன் ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்டர்
    • மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோ மீட்டர்
    • மனித உடலில் மிகவும் குளிரான பகுதி - மூக்கு
    • மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்டர்
    • மனித உடலில் வியர்க்காத உறுப்பு - உதடு
    • மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
    • இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்
    • மனித நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
    • மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை - 200 000
    • தும்மும் போது 'நன்றாய் இரு", "இறைவனுக்கு நன்றி" அல்லது அம்மா, அப்பா என்று ஏதாவது சொல்லக் கேட்டிருப்போம். தும்மும் போது இதயம் ஒரு "மில்லி செகண்ட்" நிற்குதாம்
    • எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"
    • வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"
    • உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் உயிரினம் - கொசு
    • பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்


    • பகவான் புத்தர் அவதரித்தது, போதிமரத்தடியில் ஞானம் பெற்றது, புத்தர் இந்த உலகை விட்டு மறைந்தது இம்மூன்றும் வைகாசி மாதம் பவுர்ணமி தினத்தில்தான்.
    • உலகிலேயே மிகவும் உயரமுடைய பழங்குடியினர் ருவாண்டா நாட்டில் வசிக்கும் வாட்டுஸி எனும் பழங்குடி மக்கள்தான். இவர்களில் ஆண்கள் சராசரியாக ஆறு அடி ஐந்து அங்குலம் வரையிலும், பெண்கள் சராசரியாக ஐந்து அடி பத்து அங்குலம் வரையிலும் உயரம் உடையவர்களாக இருக்கிறார்கள்.
    • உலகிலுள்ள மொத்த எரிமலைகளில் சரிபாதி எரிமலைகள் இன்னும் பொங்கி எரிந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த எரிமலைகள் பெரும்பாலும் பசிபிக் பெருங்கடலின் கரைகளைச் சுற்றியேதான் அமைந்துள்ளன.
    • கரையான்கள் துணிகளையோ, புத்தகங்களையோ நேரிடையாக அரிப்பதில்லை. அங்கு சென்றதும் அவை முட்டையிடுகின்றன. அந்த முட்டைகளிலிருந்து வெளிவரும் புது ஜீவன்கள்தான் சேதம் செய்கின்றன.
    • ஆண்டுதோறும் மழை மூலமும், பனி மூலமும் 97,000 கன் கிலோ லிட்டர் நல்ல தண்ணீர் பூமிக்குக் கிடைக்கிறது. இதில் 1.5 சதவிதம் தண்ணீர்தான் மக்களால் பயன்படுத்தப்படுகிறது.
    • அமேசான் நதி அட்லாண்டிக் பெருங்கடலில் மிக வேகமாகச் சென்று கலக்கிறது. இந்த வேகத்தால் அமேசான் நதியின் முகத்துவாரத்திலிருந்து கடலினுள் நூற்றிருபது கிலோ மீட்டர் தூரம் வரை இருக்கும் நீர் நல்ல நீராகவே இருக்கிறது.
    • மொசாம்பிக் (Mozambique) நாட்டிற்கு ஒரு சிறப்பு அதன் பெயரில் இருக்கிறது. அதன் ஆங்கிலப் பெயரில் a, e, i,o,u ஐந்து வவ்வல்ஸ் (Vowels) இருக்கிறது.
    • பிரான்ஸ் நாட்டில் 24 மணி நேரத்தைக் காட்டும் கடிகாரங்கள் அதிகமாகப் பயன் படுத்தப்படுகிறது.
    • அச்சடிக்கப்பட்ட முதல் வங்கிக் காசோலை 1763-ஆம் ஆண்டு லண்டனில்தான் அறிமுகமானது. அங்கேயிருந்த ஹோர்சஸ் வங்கிதான் இந்தக் காசோலை முறையை அறிமுகம் செய்தது.
    • ஆசியாவின் மிகச் சிறிய நாடான மாலத்தீவில் இரண்டாயிரம் சிறிய பவளத்தீவுகள் உள்ளன. இந்நாட்டின் பெரும்பாலான ஆண்கள் மீன்பிடிப்பதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.


    • பூக்கள் என்பதற்கான ஆங்கிலச் சொல்லான "ஃபிளவர்ஸ்" க்கு "எந்தப் பொருளிலும் சிறந்தது" என்று கூறுகிறது வெப்ஸ்டர் எனும் ஆங்கில அகராதி.
    • இறைவனை பூக்களைக் கொண்டு அர்ச்சித்து வழிபாடு செய்வதை பூ+செய் என்றார்கள். அதுவே பூஜை என்று மருவி விட்டது.
    • கிறித்துவர்களின் வேத நூலான பைபிளில் லில்லி எனும் மலர் பல இடங்களில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.
    • இசுலாமியர்களின் புனித நூலான திருக்குர் ஆனில் எந்தப் பூவின் பெயரும் இடம் பெறவில்லை.
    • இறைவனின் வழிபாட்டுக்குரிய பூக்களை எடுத்து நுகர்ந்து பார்த்த குற்றத்திற்காக "கழற்சிங்கன்" எனும் அரசன் தனது பட்டத்து ராணியின் மூக்கையும் கையையும் வெட்டி எறிந்து விட்டான்.
    • எறிபத்த நாயனார் எனும் சிவனடியார் "இறைவனுக்குச் சூட வேண்டிய மலரின் தூய்மை மாசுபட்டு விடும்" என்று கருதி தனது வாயைத் துணியால் கட்டிக் கொண்டுதான் நந்தவனத்தில் பூக்கள் பறிப்பாராம்.
    • காஷ்மீரில் பூக்கும் மலர்களில் 90 சதவிகித மலர்களுக்கு மணம் கிடையாதாம்.
    • பூசனிச் செடியில் காய்க்கும் பூ, காய்க்காத பூ என்று இரு வகையான பூக்கள் பூக்கின்றன.
    • மிக உயர்ந்த பூக்காத தாவரம் ஃபெர்ன் மரம்தான்.
    • காந்தள் மலர்தான் கார்த்திகைப்பூ என்று அழைக்கப்படுகிறது.
    • பன்னீர்ப்பூக்கள் இரவில்தான் மலர்கின்றன.
    • குறிஞ்சி மலர்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பூக்கின்றன.
    • பாதிரி என்கிற மலர் நடுப்பகலில் மலரக் கூடியது.


    • வெட்டுக்கிளிகள் சுமார் 13 விதமான சப்தங்களை எழுப்புகின்றன. இந்த சப்தங்களின் மூலம் மற்ற வெட்டுக்கிளிகளுக்கு வெவ்வேறு செய்திகளைப் பரிமாறிக் கொள்கிறதாம்.
    • லாக்கா எனப்படும் பூச்சிகளின் உடலிலிருந்து வெளிப்படும் ஒரு வகைப் பிசின்தான் அரக்கு. உலக அளவில் இது இந்தியாவில்தான் 80 சதவிகிதம் கிடைக்கிறது.
    • பிராணிகளில் அதிக ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது ராட்சத ஆமைதான். இவை 300 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழும்.
    • யானைக்குட்டி பிறந்தவுடன் 125 கிலோ எடையிருக்கும்.
    • பாம்பு கடிக்கும் போது சுரக்கும் நஞ்சு 4 முதல் 6 துளிகள்தான்.
    • நெருப்புக் கோழி முட்டைகளை பகலில் பெண்ணும், இரவில் ஆணுமாக இரண்டும் அடைகாக்கின்றன.
    • ஒரு பட்டுப்பூச்சிக்கூடு சுமார் 3000 அடி நீளமுள்ள பட்டு நூலைத் தருகிறது.
    • நாய்களுக்கு வியர்வை நாக்கின் வழியாகத்தான் வெளியேறுகிறது. அதனால்தான் நாய் ஓடும் போது நாக்கை வெளியே தொங்கப் போட்டுக் கொண்டிருக்கிறது.
    • ஸ்லாத் எனும் மிருகம் தலைகீழாக நடக்கும். மேலும் இது தண்ணீர் குடிப்பதில்லை.
    • பூச்சியினங்களில் குறைவான ஆயுட்காலம் கொண்டது ஈ தான். ஆண் ஈ 14 நாட்களும், பெண் ஈ 29 நாட்களும் உயிர் வாழும்.
    • புத்திசாலியான 10 மிருகங்களுள் பன்றியும் ஒன்று.
    • கோல்டன் ஈகிள் எனும் கழுகு ஒரு சிறு முயலை ஆகாயத்திலிருந்து 2 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து பார்க்கும் சக்தியுடையது.



    மழையின் பெயர்கள்
    • ஊசித் தூற்றல்
    • சார மழை (ஊதல் காற்றோடு கலந்து பெய்யும் நுண்ணிய மழை)
    • சாரல்
    • தூறல்(தூத்தல்)
    • பூந்தூறல்
    • பொசும்பல்
    • எறி தூறல்
    • தூவானம்
    • பொடித் தூறல்
    • ரவைத் தூறல்
    • எறசல்
    • பறவல் மழை
    • பருவட்டு மழை (மேலெழுந்தவாரியாக)
    • அரண்ட பருவம் (கண்டும் காணாத – தேவைக்குக் காணாத மிகச் சொற்பமான மழை)
    • மழை
    • துணை மழை (முதல் மழையைத் தொடர்ந்து இரவோ, மறுநாளோ அதற்கும் அடுத்த நாளோ பெய்வது)
    • பே மழை
    • நச்சு மழை (இடையில்லாமல் தொடந்து பெய்து கொண்டே இருப்பது)
    • வதி மழை (பூமியெல்லாம் சேறாகும்படியாக)
    • கல்மழை (ஆலம்கட்டி மழை)
    • காத்து மழை (காற்றும் மழையுமாகக் கலந்து பெய்வது)
    • சேலை நனைகிறாப்புல மழை
    • கோடை மழை
    • கால மழை
    • தக்காலம் (மழைக்காலம்)
    • பாட்டம் பாட்டமாய் (விட்டு விட்டுத் தொடர்ந்து) மழை
    • நீரூத்து மழை (தரையிலிருந்தே நீர்கசிந்து வெளியேறிக் கொண்டே இருக்கும்படியாகப் பெய்யும் தொடர் மழை)
    • வெக்கை மழை (சூட்டைக் கிளப்பி விடும்படியான பூமியைச் சாந்தி பண்ண முடியாத மழை)
    • அடை மழை
    • மாசி மழை (கரிசல் விவசாயிகளுக்கு உகந்த மழை)
    • தை மழை (வேண்டாத மழை)
    • சுழி மழை ( நெடூகப் பரவலாகப் பெய்யாமல் அங்கங்கே சுழி சுழியாகப் பெய்வது)
    • பட்டத்து மழை (சரியான காலத்தில் பெய்வது)
    • எல்லைக் கட்டிப் பெய்யும் மழை (ஊரின் எல்லையோடு பெய்து நின்றுவிடும்)
    • மகுளிக்கும் மழை (தாகத்தோடு தவித்துக் கொண்டிருந்த மண் நிறைந்த மழைகளினால் மகிழ்ச்சி அடைந்து உள்வாங்கிக் கொண்டது போக மீதி நீரை வெளியே கக்கும் போது மண்ணு மகிளிச்சிருச்சி என்பார்கள்)
    • வெள்ளை மழை (பயனில்லாத வீணான மழை)
    • வெள்ள மழை
    • பரு மழை (கன மழை)
    • பருவ மழை
    • பத மழை (விதைப்புக்கான ஈரமுள்ள மழை)
    • அப்பு மழை (காலையில் உப்பு மாலையில் அப்பு என்பது சொலவடை. மதியத்துக்கு மேல் வீசும் உப்பங்காத்து காலையிலேயே வீச ஆரம்பித்தால் அன்றைக்கு நிச்சயம் மழை உண்டு என்பது.)
    • "The quick brown fox jumps over the lazy dog." என்ற வாக்கியம் ஆங்கிலத்தின் அனைத்து எழுத்துக்களையும் கொண்டுள்ளது.
    • Abcdef என்ற ஆறு எழுத்துக்களும் கொண்ட ஒரே குறுகிய வார்த்தை Feedback.
    • ஆங்கில தட்டச்சுபலகையின் ஒரே ஒரு வரிசையை மட்டும் பயன்படுத்தி நம்மால் தட்டமுடியும் மிக நீளமான வார்த்தை Typewriter.
    • திருக்குறளில் 14,000 சொற்களும், 42194 எழுத்துக்களும் உள்ளன
    • உலகப்புகழ் பெற்ற மேனலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது
    • கட்டார் நாட்டில் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி கிடையாது


No comments: