Popular Posts

Friday, April 8, 2011

பழமொழிகளும் அதன் அர்த்தங்களும்

போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை

அர்த்தம்
:போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை.
வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும்.

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்'

அர்த்தம்: இன்னொருவரின் மகளான மருமகளுக்கு சத்தான உணவுகளை உண்ணக்கொடுத்தால், அவள் வயிற்றில் வளரும் தன் பிள்ளையான பேரப்பிள்ளை நன்றாக வளரும் என்பதுதான் இந்த பழமொழியின் ஆழ்ந்த பொருள்.

அதாவது, கர்ப்பக் காலத்தில் ஒரு பெண்ணை நன்றாக கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது இந்த பழமொழி.


உடம்பைத் தூக்கிக் கடம்பில் போடு
கடம்பு என்பது இங்கே கடம்ப மரத்தையும் கடம்ப மரத்தால் செய்யப்பட்ட கட்டிலிலையும் குறிக்கிறது.

முதலைக் கண்ணீர் வடிப்பது போ

யாராவது போலியாக அழும்போது முதலைக் கண்ணீர் வடிப்பது போன்று என்று ஒரு பழமொழியைச் சொல்வார்கள். அதாவது அறிவியல் பூர்வமாக முதலை கண்ணீர் வடிப்பதில்லை. அதனால் இந்த அழுகை போலியானது என்பதை உணர்த்துவதற்காக அவ்வாறு சொல்லப்படுகிறது.
ஆனால் அதற்கான பொருள் அதுவல்ல, முதலை இழந்தவன் வடிக்கிற கண்ணீர் போல என்பதுதான் நாளடைவில் திரிந்து முதலைக் கண்ணீர் என்றாகிவிட்டது. அதாவது தொழிலில் முதல் போட்டு செய்தவன் இழப்பு ஏற்பட்டால் கண்ணீர் வடிப்பதைப் போன்றது என்பதை கூறவே இந்த பழமொழி உண்டானது.


“இஞ்சி தின்ற குரங்கு போல…”


இஞ்சியைப் போன்ற தோற்றமுள்ள காட்டு மஞ்சள் கிழங்கின் மீது, குரங்குக்கு மிகுந்த மோகம். இது, மாங்காய் இஞ்சியைப் போன்றது. காரமில்லாதது; சற்று இனிப்பும் அதில் இருக்கும்.

அதில் ருசி கண்ட குரங்கு, அதுபோலவே தோன்றும் சாதாரண இஞ்சியைக் கண்டு ஏமாந்து, கடித்துச் சுவைத்து விடும். அப்போது ஏற்படும் அதன் முகபாவத்தையும், கோபத்தையும் சொல்லத் தேவையில்லை.



1 comment:

Anonymous said...

This is not use full ..