Popular Posts

Sunday, May 1, 2011

தீபாவளி தகவல்கள்

முதல் தீபாவளி
தமிழ்நாட்டில் தீபாவளி முதன் முதலாக மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்தில்தான் கொண்டாடப்பட்டது.

தீபாவளி பட்டாசு
டபாஸ் எனும் வடமொழிச் சொல்லிலிருந்துதான் பட்டாசு என்ற பெயர் வந்தது. டபாஸ் என்ற வடமொழிச் சொல்லுக்கு "உரத்த ஒலி" என்று பொருள்.

வடமாநிலத் தீபாவளி
தமிழ்நாட்டில் தீபாவளி ஒருநாள் மட்டும் கொண்டாடப்படுகிறது. ஆனால் வடமாநிலங்களில் ஐந்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். இந்நாட்களில் லட்சுமி பூஜை, நரக சதுர்த்தி, எமதர்ம வழிபாடு போன்ற விழாவையும் கொண்டாடுகின்றனர். இப்பண்டிகையின் போது திருமணமாகாத கன்னிப் பெண்கள் நீர்நிலைகளில் தீபம் ஏற்றி மிதக்க விடுகின்றனர். இப்படி செய்வதால் அவர்களுக்கு நல்ல வரண் அமையும் என்பதும், குடும்பத்தில் செல்வங்கள் பெருகும் என்பதும் நம்பிக்கை.

தீபாவளிக் கணக்கு
இராஜஸ்தான் மாநிலத்தில் தீபாவளியை தீபமாலிகா என்று அழைக்கின்றனர். இவர்கள் அமாவாசை என்றால் மாதம் முடிந்து விடுகிறது. அமாவாசையின் மறுநாள் புது மாதம் துவங்கி விடுகிறது என்று கணக்கு வைக்கின்றனர். இப்படி தீபாவளி அன்று வரும் அமாவாசை வருடம் முடிந்ததாகக் கணக்கு கொள்கின்றனர். இவர்களுக்கு தீபாவளிதான் ஆண்டுக் கணக்கு

No comments: